உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சாம் ஜோன்ஸின் 'நதி' - இந்த வாரம் ரிலீஸ்
ஏமாளி பட புகழ் சாம் ஜோன்ஸின் அடுத்த படம் நதி. இந்த படத்தில் அவருக்கு ஜோடிங்க நடிகை கயல் ஆனந்தி நடித்து இருக்கிறார். வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த், ஏ.வெங்கடேஷ், சுரேகவாணி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாம் ஜோன்ஸ் அவரது மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து இருக்கிறார்.

நதி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஒரு shy டைப் பையன் தான் ஹீரோ, அவனை துரத்தி துரத்தி லவ் பண்ணும் ஹீரோயின்.
அதற்கு பிறகு அவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வர, ஜாதி ரீதியாக கடும் எதிர்ப்பு வருகிறது. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் நதி படத்தின் கதை என்பது ட்ரைலர் பார்த்தாலே தெரியும்.
நதி படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 22ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ட்ரைலர் இதோ 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    