சமந்தா
நடிகை சமந்தா தற்போது இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இயக்குநர்கள் ராஜ் டி கே உடன் இணைந்துள்ளார்.
ஆம், ரக்ட் பிரம்மாண்டம் எனும் வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே தயாரித்து இயக்க, அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.
ஒர்க் அவுட் வீடியோ
தனது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகம் செல்லும் நபர்களில் ஒருவர் சமந்தா. ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யவதை வழக்கமாக கொண்டுள்ள சமந்தா, அவ்வப்போது அதன் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது 110 கிலோ எடையை அசால்டாக தூக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
💪 Motivate Yourself 💪⭐
— Michael 🐐 (@Itz_MichaelVj) February 28, 2025
Thalavii 🥵 Her Fitness 🔥🥵
Samantha Role Model
Sammu Sam#Samantha#SamanthaRuthPrabhu#Sammupic.twitter.com/77jOc7MlOP

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
