நோய் பாதித்து ஒரு வருடம்.. உணர்ந்த முக்கிய விஷயம்: சமந்தாவின் உருக்கமான பதிவு
சமந்தா
நடிகை சமந்தா கடந்த வருடம் தான் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார். அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வந்தார். உடல்நிலை மோசமான நிலையிலும் அவர் படங்களுக்கு டப்பிங் பேசி கொடுத்து தனது வேலையை முடித்து கொடுத்து இருந்தார்.
தொடர்சிகிச்சை பெற்று தற்போது படிப்படியாக குணமடைந்து வரும் அவர், தான் நோய் பதித்து ஒரு வருடத்தை கடந்திருப்பது பற்றி பதிவிட்டு இருக்கிறார்.
1 வருடம்..
பாதிப்பை கண்டறிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. புது நார்மலை கொடுத்த வருடம். என் உடலில் பல போராட்டங்கள்.. உப்பு, சக்கரை எடுத்துக்கொள்ள கூடாது, மருந்துகள் தான் உணவாக மாறி போனது.
தொழில் ரீதியாக பல தோல்விகளும் வந்தது. வருடம் முழுக்க பிரார்த்தனைகளும் பூஜைகளும் ஆசீர்வாதம் மற்றும் கிப்ட் கேட்டு அல்ல.. வலிமை மற்றும் அமைதியை கேட்டு தான்.
எல்லா நேரமும் நாம் நினைத்தபடியே இருக்காது என புரியவைத்த வருடம். நாம் கட்டுப்படுத்த முடிந்தத்தை தான் கண்ட்ரோல் செய்ய முடியும், மற்றவற்றை விட்டுவிட்டு ஒவ்வொரு படியாக முன்னேறி செல்ல வேண்டும். முன்னேறுவதே வெற்றி தான் என உணர்ந்தேன். இவ்வாறு சமந்தா பதிவிட்டு இருக்கிறார்.
பெரிய விபரீதத்தில் இருந்து உயிர் தப்பிய தொகுப்பாளினி ரம்யா- அவரே வெளியிட்ட போட்டோ