நயன்தாரா, த்ரிஷா இல்லை.. சிறந்த நடிகைகள் குறித்து சமந்தா போட்ட லிஸ்ட்
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலமாக வலம் வருகிறார். சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.
சமந்தா சமீப காலமாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளார்.
கடைசியாக சமந்தா நடிப்பில் 'சிடாடல் ஹனி பன்னி' என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அதில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவார்.
லிஸ்ட் இதோ
அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் சமந்தா. தற்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? என்று கேட்க, அதற்கு சமந்தா, 'உள்ளொழுக்கு படத்தில் நடித்த பார்வதி.
சூக்சமதர்ஷினியில் நடித்த நஸ்ரியா, அமரன் படத்தில் நடித்த சாய்பல்லவி, ஜிக்ராவில் ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல் படத்தில் நடித்த அனன்யா பாண்டே' ஆகியோரின் நடிப்பு என்னை கவர்ந்தது" என்று பதிலளித்துள்ளார்.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
