'சிறந்த நாள்'.. காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் அனுபவத்தை பகிர்ந்த சமந்தா
காஃபி வித் கரண் புதிய சீசன்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'காஃபி வித் கரண்'. இதன் புது சீசனுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளது.
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் 'காஃபி வித் கரண்' என்ற டாக் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
எப்போதும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த புது சீசனில் தெலுங்கில் இருந்து சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
சமந்தா மகிழ்ச்சியுடன் பதிவு
இதில் நடிகை சமந்தா தன்னுடைய படப்பிடிப்பை நேற்று முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் குறித்து நடிகை சமந்தா பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் ' சிறந்த நாள் என்று கூறி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார் '.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri