விவாகரத்து பற்றி பேசவேண்டாம்.. கடுப்பான நடிகை சமந்தா
நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு ஆண்டுகள் நீடித்த இந்த காதல் திருமணம் தற்போது விவகாரத்தில் முடிந்துள்ளது. இவர்களின் விவாகரத்து செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
சமந்தாவைப் பற்றி வரும் சில செய்திகளில் இன்னமும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து சரியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
சமந்தா கூறியதாவது :
" அது பற்றி பேசி முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி பேசுவது முக்கியம், அதைப் பற்றி பேசியும் முடித்தேன். ஆனால், அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டியது அவசியமில்லை என நான் நினைக்கிறேன் ".
மேலும் " மக்கள் ஒவ்வொருவருக்கம் பல வித கருத்துக்கள் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டும், இருவருக்கும் இடையில் பரிவுடனும்தான் இருக்கிறோம். நாகரீகமான முறையில் மக்கள் அவர்களது வருத்தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். " என கூறியுள்ளார்.