விவாகரத்து பற்றி முதல் முறையாக வாய்திறந்த நடிகை சமந்தா! இதுதான் காரணம்
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ஷாக் கொடுத்தனர்.
அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. அது பற்றி பல்வேறு வதந்திகளும் வலம் வர தொடங்கியது. இருப்பினும் இருவருமே விவகாரத்துக்கு காரணத்தை தற்போது வரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சமந்தா ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அதன் ப்ரொமோ தற்போது வெளிவந்திருக்கிறது. அப்போது அவர் விவாகரத்து பற்றியும் பேசி இருக்கிறார்.
மகிழ்ச்சி இல்லாத திருமணம்
"திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணம்.. வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள், ஆனால் உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது" என சமந்தா கூறி இருக்கிறார்.
அதனால் சமந்தா அவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பதை பற்றி தான் இப்படி மறைமுகமாக பேசி இருக்கிறார் எனதெரிகிறது.
காபி வித் கரண் முழு ஷோ ஒளிபரப்பானால் தான் சமந்தா மேலும் என்ன கூறி இருக்கிறார் என்பது தெரியவரும்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
