"இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது"- நடிகை சமந்தா ஓபன் டாக்!
தமிழில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா.
அப்படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து கமிட்டாகி முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.
இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனின் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது.
இதில் ராஜி என்னும் முற்றிலும் வேறுபட்ட காதிபத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். மருபுறம் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சமந்தா. அவர் கூறியிருப்பதாவது, " ஒரு நடிகையாக பிரபலமில்லாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.
அப்படிப்பட்ட கதாபத்திரமாக ராஜி அமைந்தது. அதில் நடித்தது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது, மேலும் பல வாய்ப்புகள் அமையவும் அது வழிவகுத்தது " என தெரிவித்திருக்கிறார்.