'நாக சைதன்யவால் தான் எனக்கு இந்த பழக்கம் வந்தது' - ரசிகர்களுக்கு சமந்தா சொன்ன ரகசியம்..

actress Samantha naga chaithanya sam chay
By Jeeva Feb 21, 2022 11:40 AM GMT
Report

தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா, தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் இன்று சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சங்குதளம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பெரிய வரவேற்பை பெற்றுள்ள அந்த போஸ்ட்டரை தொடர்ந்து அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர் "பிட்னெஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர என்ன காரணம்" என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா "நான் உங்களுக்கு பெரிய ரகசியத்தை சொல்கிறேன். நான் ஜிம்மிற்கு போக ஆரம்பித்ததே, நாக சைதன்யாவை பார்ப்பதற்காக தான்.

சைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வார். அதனால் நானும் ஜிம்மில் இணைந்தேன்" என தனது முன்னாள் கணவர் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார் சமந்தா.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US