சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பின் போது தான் நடிகை சமந்தா மயங்கி விழுந்துள்ளார்.
அரைமணி நேரம் கூட தன்னால் ஒரு இடத்தில் நிற்க முடியாத என்று தெரிந்தும் இப்படியொரு கடுமையான சண்டை காட்சியில் நடித்து சமந்தா மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. விரைவில் சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரவேண்டும், பழைபடி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
அண்ணா சீரியல் : ரத்னாவிற்கு பதிலாக இசக்கி கழுத்தில் தாலி கட்டிய முத்துப்பாண்டி.. அதிர்ச்சியில் சண்முகம்
சமந்தா அளித்த பதில்
நடிகை சமந்தாவின் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் தொகுப்பாளினி நடிகை சமந்தாவிடம் 'சில நடிகைகள் முத்த காட்சிகளிலும் எல்லாம் நடிக்க மாட்டேன் என கூறுவார்கள், அதே போல் உங்களுக்கு எதாவது விஷயங்கள் இருக்கிறதா' என கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த சமந்தா 'நான் இப்போ முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் உதைப்பார்கள். முதல் படத்திலேயே எல்லாமே பண்ணியாச்சு. இப்போ என்ன முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது' என கூறியிருந்தார் சமந்தா.
You May Like This Video