நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்.. முதல்முறையாக சமந்தா சொன்ன கருத்து!
நயன்தாரா சர்ச்சை
நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். அவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றது பற்றி சர்ச்சை எழுந்தது.
அது பற்றி குழு அமைத்து விசாரித்த அரசு நயன் மற்றும் விக்கி தவறு செய்யவில்லை என அறிவித்தது. அவர்களுக்கு ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சமந்தா கருத்து
வாடகைத்தாயாக தற்போது சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது பேட்டி ஒன்றில் சமந்தா பேசும்போது நயன்தாரா விஷயம் பற்றியும் கேட்கப்பட்டது.
"நான் யாரை பற்றியும் opinion சொல்லவில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் சரி. வாடகைத்தாய் விஷயம் பெரிய அளவில் பேசப்படுவது யசோதா படத்திற்கு கிடைத்த free marketing" என சமந்தா தெரிவித்து இருக்கிறார்.
சமந்தாவின் முழு பேட்டி இதோ
கொட்டோ கொட்டுனு கொட்டுது.. லவ் டுடே படம் வசூல் விவரம் சொன்ன தயாரிப்பாளர் கே.ராஜன்