போலீஸ் உடையில் பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா.. வெளிவந்த புகைப்படம்
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை சமந்தா.
இவருடைய நடிப்பில் தற்போது யசோதா, குஷி மற்றும் சகுந்தலம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பர படங்களிலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா புதிய விளம்பரத்தில் நடித்து வருகிறார். அதுவும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருடன் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன்வீர் சிங் - சமந்தா
அந்த விளம்பர படப்பிடிப்பில் இருந்து போலீஸ் உடையுடன் ரன்வீர் சிங் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா மற்றும் ரன்வீர் சிங் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதும் இந்த விளம்பர படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
