மகள்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கு நடிகை சமந்தா கொடுக்கும் அட்வைஸ் !

Samantha
By Jeeva Oct 27, 2021 12:20 PM GMT
Report

நடிகை சமந்தா அவரின் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.

மேலும் தற்போது பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம். 

இந்நிலையில் சமந்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஸ்டோரிகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் மகள்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் பதிவு ஸ்டோரி போட்டுள்ளார்.

அதில் "உங்கள் மகளை திறமையானவளாக ஆக்குங்கள், அவளை யார் திருமணம் செய்வது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவளுடைய திருமண நாளுக்காக பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அவளுடைய கல்விக்காகச் செலவிடுங்கள்.

முக்கியமாக, அவளை திருமணத்திற்குத் தயார்படுத்துவதற்குப் பதிலாக, அவளைத் அவளுக்காக தயார்படுத்துங்கள். அவளுக்கு தன்னம்பிக்கை, சுய அன்பையும் கற்று கொடுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகள்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கு நடிகை சமந்தா கொடுக்கும் அட்வைஸ் ! | Samantha Advice Note To Parents


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US