உடல் வலி, என்னால் முடியல என்று கூறிய சமந்தா.. இரவு 11 மணிக்கு மெசேஜ் செய்து நடிகையை படுத்தி எடுக்கும் நபர்
சமந்தா
சமந்தா தற்போது பிஸியான முன்னணி நடிகைகளில் ஒருவர். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல திரை துறையில் கலக்கி வருகிறார்.
உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூட அவ்வப்போது தன்னுடைய ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய வாட்சப் சான்டிங் புகைப்படம் ஒன்றும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் தனது ஜிம் பயிற்சியாளரிடம் தனக்கு உடல் வலி உள்ளதாகவும், இன்று ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுத்துக்கொள்கிறேன் என்றும் சமந்தா கூறியுள்ளார்.
படுத்தி எடுக்கும் நபர்
இதற்கு சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர், 'நான் வந்துவிட்டேன், நீங்க இன்னும் இங்க காணும்' என கூறியுள்ளார். தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் தனக்கு லீவ் கொடுக்காமல், உடற்பயிற்சி செய்ய சொல்லி தன்னை படுத்தி எடுப்பதாக கூறியுள்ளார் சமந்தா.
நடிகை சமந்தா வெளியிட்டுள்ள இந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..