விவாகரத்திற்கு பின் மீண்டும் சந்தித்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா ! எங்கு தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.
இதனிடையே தற்போது விவாகரத்திற்கு பின் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சந்தித்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.
அதன்படி Ramanaidu Studio-வில் அவர்கள் இருவரும் படத்தின் ஷூட்டிங்கில் காணப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் ஒரே லொகேஷனில் இருந்தாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், ஷூட்டிங் முடிந்தபின் அவர்கள் தங்களின் காரில் ஏறி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.