சமந்தாவின் கணவர் ராஜ் சொத்து மதிப்பு! சமந்தாவை விட இவ்வளவு குறைவா
நடிகை சமந்தா சமீபத்தில் அவரது காதலர் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
மேலும் சமந்தா ஒரு குடும்பத்தை அழித்து விட்டு தனது குடும்பத்தை உருவாக்கி இருப்பதாக நடிகை பூனம் கவுர் விமரிசித்து இருந்ததும் வைரல் ஆனது.

ராஜ் சொத்து மதிப்பு
இந்நிலையில் சமந்தா மற்றும் ராஜ் இருவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற விவரத்தை பார்க்கலாம்.
சமந்தா மற்றும் ராஜ் என இருவரது சொத்துக்களை சேர்த்தால் 200 கோடி ரூபாய் வரும். சமந்தாவுக்கு மட்டும் 120 கோடி ரூபாயும், ராஜிடம் 80 - 85 கோடி வரையும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தாவை விட ராஜ் நெட் ஒர்த் குறைவாக இருப்பதும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
