நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு.. முகத்தை மறைத்தபடி சென்றது ஏன்?
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இருப்பினும் அவர் உடல்நிலை காரணமாக சமீப காலமாக படங்களில் நடிப்பது இல்லை.
மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீள தொடர் சிகிச்சை பெற்று வரும் அவர் ஒர்கவுட்டிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் உடல் தொடர்ந்து மெலிந்துகொண்டே போவதும் இணையத்தில் விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் சமந்தா பதிலடி கொடுத்து இருந்தார்.
முகத்தை காட்டாத சமந்தா
மும்பையில் வழக்கமாக சமந்தா ஜிம்மில் இருந்து வெளியில் வரும்போது அவரை போட்டோ எடுக்க பெரிய பத்ரிக்கையாளர்கள் கூட்டமே காத்திருக்கும். ஒருமுறை அவர்களை சமந்தா கோபமாக திட்டி இருந்த வீடியோவும் வைரல் ஆனது.
இந்நிலையில் சமந்தா தற்போது ஜிம்மில் இருந்து வெளியில் வரும்போது யாரும் போட்டோ எடுக்க கூடாது என்பதற்க்காக மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் கோபமாக வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.