ஹைதராபாத்தில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை சமந்தா..? ரசிகரின் கேள்வி அதிரடியான பதில்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது.
நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாகசைதன்யாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் 'சாட்' செய்த சமந்தா ரசிகர் ஒருவர் “நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா' எனக் கேள்வி கேட்டார்.
" எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது என தெரியவில்லை. எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன் " என அதிரடியாக பதிலளித்துள்ளார்.