ஹாலிவுட்டிலும் கால் பதிக்கும் நடிகை சமந்தா- அவரே முதல் படமே இவருடன் தானா, வெளிவந்த தகவல்
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
இவர் படம் நடித்தாலே ஹிட் தான், செம வசூல் செய்யும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் உள்ளது. தொடர்ந்து படங்கள் நடித்துவரும் சமந்தா தனது இடையில் ஆன்மீக சுற்றுப் பயணம் எல்லாம் மேற்கொண்டார்.
இப்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகை சமந்தாவிற்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
BAFTA விருது வென்ற Welsh இயக்குனர் பிலிப் ஜான் இயக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடிக்க இருக்கிறாராம். படத்திற்கு Arrangements of Love என்று பெயர் வைத்துள்ளார்களாம்.
இந்த தகவலை நடிகை சமந்தாவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
A whole new world ♥️
— Samantha (@Samanthaprabhu2) November 26, 2021
Absolutely thrilled to be a part of Arrangements Of Love .
Thank you sir #PhilipJohn for picking me to be #Anu
Cant wait to begin this exciting journey .. Thankyou @SunithaTati always ?@gurufilms1 @timerimurari @NimmiHarasgama #ArrangementsOfLove pic.twitter.com/Nklig8jDOJ