டாப் நடிகரின் படத்தில் முதல்முறையாக நடிகை சமந்தா செய்யவுள்ள விஷயம்..

Samantha Allu Arjun
By Jeeva Nov 15, 2021 03:10 PM GMT
Report

தெலுங்கில் டாப் நடிகராக உள்ள அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.  

இப்படத்தின் சிங்கள் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று யூடியூப் அதிக பார்வைகளை குவித்துள்ளது.

மேலும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடித்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடனமாடும் மாஸ் பாடல் காட்சி என்பதால் அதில் முன்னணி நடிகையை நடனமாடவைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி தற்போது அதில் நடிகை சமந்தா நடமாட ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சமந்தா இதற்கு முன் சுகுமார் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US