மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆடும் சமத்தா.. ஊ சொல்றியாவை ஓவர்டேக் செய்யுமா? முன்னணி ஹீரோ படத்தில் ஒப்பந்தம்
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் பாடலில் நடனமாடி இருந்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. ஊ சொல்றியா இல்ல ஊஊ சொல்றியா என அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி விட்டது . சமந்தாவா இது என அந்த பாடலை பார்த்த அனைவரும் வாய்பிழந்தார்கள்.
சமந்தா சமீபத்தில் விவாகரத்தான நிலையில் இதுபோன்ற பாடல்களில் அதிகம் தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி நடிக்க தொடங்கியது தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூட கிசுகிசுக்கப்பட்டு வருவது தெரிந்தது தான்.
இந்நிலையில் அடுத்து விஜய் தேவர்கொண்டாவின் லைகர் படத்தில் சமந்தா ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாட போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் மகாநடி படத்தில் ஜர்னலிஸ்ட் ஆக நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.