முன்னாள் கணவரின் புகைப்படங்களை டெலிட் செய்த சமந்தா.. காரணம் இந்த காதல் கிசுகிசு தானா
விவாகரத்து
நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் சில மாதங்களுக்கு முன் தங்களது விவாகரத்து செய்தியை அறிவித்தார்.
விவாகரத்துக்கு பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.
விரைவில் அவர் குணமடைந்து பழைய சுறுசுறுப்புடன் மீண்டும் வருவார் என காத்துருக்கிறார்கள் ரசிகர்கள்.
டெலிட் செய்த சமந்தா
நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் அணைத்து புகைப்படங்களை திடீரென டெலிட் செய்ததாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் நாகசைதன்யாவும் பிரபல நடிகை சோபிதா துலிபாலா இருவரும் டேட்டிங் செய்து வருவதை அறிந்த பின் தான் சமந்தா இப்படி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.