திடீரென விவாகரத்து குறித்த பதிவை நீக்கிய நடிகை சமந்தா ! மீண்டும் இணைகிறதா இந்த ஜோடி..
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக இருந்து வந்தவர்கள் நாக சைதன்யா - சமந்தா ஜோடி.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு சென்ற வருடம் அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
பின்னர் நடிகை சமந்தா தனது படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாட பல அவர் கோடியில் அவர் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
இதனிடையே நடிகர் நாக சைதன்யாவும் சமந்தா குறித்து பேட்டிகளில் நல்ல படியாக பேசியிருந்தார். அதன்படி சமந்தா சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் எனவும் திரையில் அவர் தான் எனக்கு சிறந்த ஜோடி எனவும் பேசியிருந்தார் நாக சைதன்யா.
இந்நிலையில் தற்போது சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார். இதனால் தற்போது இந்த நட்சத்திர ஜோடிகள் மீண்டும் இணைவார்களா என கேள்வி ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri