மோசமான வாசகம் பொருந்திய நடிகை சமந்தா அணிந்த டீ-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகை சமந்தா எப்போதும் படு பிஸியாக இருக்கும் ஒரு நடிகை. படங்கள் அதிகம் கமிட்டாகி நடித்துக் கொண்டே இருக்கிறார்.
இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது புதுபுது விஷயங்களை கற்றுக்கொள்வது, ஆரோக்கியம், தோட்டம் அமைப்பது என அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருபக்கம் நிறைய விளம்பரங்களிலும் நடிக்கிறார், தான் சொந்தமாக வைத்துள்ள ஆடை தொழிலுக்கும் போட்டோ ஷுட் செய்கிறார். இப்படி படு பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றார்.
அங்கு பனி சறுக்கு பயிற்சி மேற்கொண்டார், வீடியோக்கள் எல்லாம் நிறைய வெளியாகின. சுற்றுலா முடித்துவிட்டு வந்த நடிகை சமந்தா ஒரு மோசமான வசனம் இருக்கும் டீ-ஷர்ட் அணிந்து வந்துள்ளார்.
அது மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டது. அப்படி சமந்தா அணிந்த டீ-ஷர்ட்டின் விலை மட்டும் ரூ. 20 ஆயிரம் என கூறப்படுகிறது.