கர்ப்பமாக இருக்கும் காஜல் பற்றி விவாகரத்தான சமந்தா போட்ட கமெண்ட்
நடிகை சமந்தா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவை திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதற்கு முன்பே அவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு என பேசப்பட்டாலும் அவர்கள் விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது தான் அது உறுதியானது. தற்போது சமந்தா சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
மறுபுறம் மற்றொரு முன்னணி நடிகையான காஜல் அகர்வால் 2020ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உறுதி செய்ய pregnancy டெஸ்ட் கிட் விளம்பரம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில் நடிகை சமந்தா கமெண்ட் செய்து இருக்கிறார். "அவ்வ்.. குயூட்டி.. ஜொலிக்கிறியே" என சமந்தா கூறி இருக்கிறார்.
