சமந்தாவின் அப்பா போட்ட உருக்கமான பதிவு! விவாகரத்து பற்றி கலக்கம்
விவாகரத்து
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பல வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். கடந்த வருடம் அவர்கள் விவாகரத்தை அறிவித்தது சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதன் பின் சமந்தா தன் கெரியரில் பிஸியாகிவிட்டார். அவர் கைவசம் தற்போது நான்கைந்து படங்கள் இருக்கிறது. அதிலும் அவர் ஹிந்தியில் தற்போது களமிறங்குவதால் சம்பளத்தையும் அதிகரித்து இருக்கிறார். தற்போது சமந்தா ஒரு படத்திற்கு 4 கோடி வரை கேட்கிறார் என சொல்லப்படுகிறது.

அப்பா எமோஷ்னல் பதிவு
இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
"நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
சமந்தா திருமண போட்டோக்களை வைத்து அவர் போட்டிருக்கும் அந்த பதிவை நாக சைதன்யா ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan