சமந்தா தயாரிப்பில் வெளியாகும் முதல் படம்.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்

Bhavya
in பிரபலங்கள்Report this article
சமந்தா
உழைப்பால் உயர்ந்த பிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்தவர் உடல்நிலை குறைவால் இடையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, இதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றது.
அதிரடி அப்டேட்
நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
சமந்தா தயாரித்த முதல் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார்.