பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் நடிகை சமந்தா.. அதுவும் முன்னணி நடிகையின் தயாரிப்பில்
தமிழில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை டாப்ஸி.
இவர் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் வருகிறார். நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை டாப்சி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும், இப்படம் மூலம் நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தாவிற்கு, ஹிந்தியில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri