சினிமாவில் இருந்து விலகிய சமந்தா! மன அமைதிக்கு எங்கே சென்றிருக்கிறார் பாருங்க
சமந்தா
நடிகை சமந்தா அவரது உடல்நிலை காரணமாக தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் முழுமையாக குணமடைந்த பிறகு தான் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்டுகிறது.
விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், Citadel என்ற தொடரிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார் சமந்தா.
கோவில்
தற்போது சமந்தா மன அமைதிக்காக கோவில்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். வேலூரில் இருங்க தங்க கோவிலுக்கு சமந்தா சென்று இருக்கிறார்.
அதன் பின் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் அவர் சென்றிருக்கிறார்.

