பெண் கதாபாத்திரத்தை வைத்து உருவாகும் LCU படம்.. லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் டாப் நடிகை
LCU
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கென்று தனி யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்காகியுள்ளார். இதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என பெயர் வைத்துள்ளனர். ஹாலிவுட்டில் வரும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் போல இதனை உருவாக்கி இருக்கிறார்.
இதில் விஜய்யின் லியோ, கார்த்தியின் கைதி மற்றும் கமலின் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் இணைந்துள்ளன. அதே போல் தற்போது லோகேஷ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் பென்ஸ் திரைப்படமும் LCU-வில் இணைந்துள்ளது. அடுத்ததாக கைதி 2 படமும் வரவுள்ளது.
இதுவரை LCU திரைப்படங்களில் ஆண் கதாபாத்திரம் மட்டுமே முதன்மையாக கதையை நகர்த்தி செல்லும். ஆனால், தற்போது பெண் கதாபாத்திரத்தை வைத்து LCU-வில் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்கவுள்ளாராம்.
சமந்தா
இந்த நிலையில், இப்படத்தில் இந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா கதையின் நாயகியாக நடிக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், LCU-வில் சமந்தா முதன்மை கதாபாத்திரமாக மாறிவிடுவார்.
ஆனால், இப்படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்பில்லை, மாறாக பென்ஸ் படம் போல், தயாரிக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். LCU என்றாலே கண்டிப்பாக ஆக்ஷன் தான். அப்படி இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக சமந்தாவிற்கு அந்த ஆக்ஷன் கதாபாத்திரம் சிறப்பாக பொருந்தும்.
சிட்டாடல், யசோதா, பேமிலி மேன் 2 ஆகிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் ஆக்ஷனில் அசத்தியுள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று.