நடிகை சமந்தா புது காதல்.. மறைமுகமாக உறுதி செய்தாரா நாக சைதன்யா?
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து இருந்தாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதற்காக நெட்டிசன்கள் தொடர்ந்து நாக சைதன்யாவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி பேசிய நாக சைதன்யா, 'வேறு யாரும் செய்யாத ஒரு விஷயத்தை நான் செய்துவிடவில்லை. என்னை குற்றவாளி போல பார்கிறார்கள்' என கூறி இருக்கிறார்.
சமந்தா பற்றி..
"நான் எந்த பேட்டிக்கு சென்றாலும் இதை பற்றி கேட்டு என்னை தூண்டிவிட்டு என்னிடம் இருந்து எதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்கள். நான் எதாவது கூறினால் அதன்மூலமாக மேலும் பல செய்திகள், கிசுகிசுக்கள் வருகின்றன."
"நான் அதில் இருந்து மீண்டு வந்துவிட்டேன், சமந்தாவும் தான். இருவருக்கும் ஒருவரை மீது மற்றொருவருக்கு மரியாதையை இருக்கிறது. நடந்தது எங்கள் இருவரது நல்லதற்காக தான்" என கூறி இருக்கிறார்.
சமந்தாவும் moved on தான் என நாக சைதன்யா அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருப்பதால் அவர் புது காதலில் இருப்பதாக வரும் கிசுகிசுக்களை நாக சைதன்யா உறுதி செய்கிறாரா என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
