பிரபல நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா..யார் அந்த நடிகை, வெளிவந்த தகவல்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் ஹிந்தியிலும் கால் பதித்து அங்கேயும் படங்களில் நடிக்கவுள்ளார்.
Pratyusha என்னும் Charitable Trust நடத்தி வரும் சமந்தா தெலுங்கு சினிமாவை சேர்ந்த சக நடிகை ஒருவருக்கு பெரும் உதவி செய்து அவரை காப்பாற்றிய சம்பவம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
சமந்தாவால் உதவி பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில் அவரால் உதவிபெற்று காப்பாற்றப்பட்ட கதையை குறித்து நடிகை தேஜஸ்வி மதிவாடா கூறியுள்ளார். தேஜஸ்வி கூறுகையில், 'சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன்.
சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்நிலையில் எனக்கு ‘டிபி' நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.
அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்' என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
