அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்.. தற்போது சமந்தா கொடுத்த பதிலடி
சமந்தா நடித்து தயாரித்து இருந்த "மா இன்டி பங்காரம்" படம் சமீபத்தில் பெரிய ஹிட் ஆகி இருந்தது. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் இது ரிலீஸ் ஆனது.
இந்த படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக போஸ்டர் உடன் அறிவித்து இருக்கிறார் சமந்தா.

அசிங்கப்படுத்தியவருக்கு பதிலடி
படத்தின் ரிலீசுக்கு முன்பு பி சென்டர் தியேட்டர் ஓனர் ஒருவரிடம் தோழியை வைத்து பேச வைத்தாராம் சமந்தா. 'படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்' என கேட்டதற்கு, "ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவாங்க. அது பெரிய ஹீரோ படம் என்றால் பரவாயில்லை. அவர் கவர்ச்சி தான் மக்களுக்கு தெரியும். ஆனால் அவர் படம் நடித்தால் யார் வருவாங்க" என சொன்னாராம்.
அவர் பேசுவதை சமந்தாவும் கேட்டுக்கொண்டிருந்தாராம். தற்போது படம் ரிலீஸ் ஆகி 100 கோடி வசூலித்துள்ள நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா.
இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் பற்றி கேட்டால் 'No' சொல்ல கூடாது, "Let’s see" என்று சொல்ல வேண்டும் என சமந்தா கூறியுள்ளார்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan