திருமண உடையில் நடிகை சமந்தா.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது கோலிவுட், பாலிவுட் என பல திரையுலகில் பிசியாக இருந்து வருகிறார்.
இதில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஹிந்தியில் மட்டுமே மூன்று திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் சமந்தா.
சமந்தாவின் நடிப்பில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்து குஷி படத்திற்கு மட்டும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண கோலத்தில் சமந்தா
நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. படத்தின் கிளைமாக்ஸ் திருமண காட்சியில் இஸ்லாமிய முறைப்படி திருமண பெண் உடை அணிந்து சமந்தா விஜய் சேதுபதியின் முன் வருவார்.
இந்நிலையில், அந்த காட்சியில் திருமண உடையில் வரும் சமந்தாவின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..



திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
