கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. திடீரென சென்னைக்கு வந்தது ஏன்?
சமீபத்தில் அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா திடீரென ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார்.
படங்களில் இருந்து அவர் பிரேக் எடுத்துக் கொண்டிருந்தாலும், டிவியில் தொகுப்பாளராக அவர் இப்போது அறிமுகம் ஆகிறார். தமிழில் சோனி விழா சேனல் நடத்தும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் சமந்தா வருகிறார்.

ஷூட்டிங் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக சமந்தா விமானத்தில் வந்திருக்கிறார். அந்த ஏர்போர்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
செலிபிரிட்டி மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.