மும்பையில் செட்டில் ஆன சமந்தா.. எங்கே சென்று இருக்கிறார் பாருங்க
நடிகை சமந்தா சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டிருக்கிறார். அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக கூறினார் அவர்.
அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து பெரிய ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
மும்பையில் சமந்தா
சமந்தா சமீப காலமாக மும்பையில் தான் அதிகம் இருக்கிறார். சமீபத்தில் பிக்கில்பால் போட்டிகளில் அவர் கலந்து கொண்டிருந்தார். World Pickleball Leagueல் அவர் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
அதற்காக சென்னைக்கு வந்து சில நாட்கள் இருந்த அவர் தற்போது மீண்டும் மும்பைக்கு சென்றுவிட்டார்.
அங்கு சமந்தா சலூன் ஒன்றிற்கு சென்று திரும்பி வரும்போது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.