புஷ்பா 2வில் சமந்தா இருக்கிறாரா? இல்லையா? வெளிவந்த புதிய தகவல்
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற உ சொல்றியா மாமா பாடல் படத்தின் வெற்றி மிகமுக்கியமாக அமைந்தது. குறிப்பாக இந்த பாடலில் நடனமாடிய சமந்தா, இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

புஷ்பா 2வில் சமந்தா
இதனால், புஷ்பா 2விழும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவாரா என்று ரசிகர்கள் பலரும், கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், அதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சமந்தாவுடன் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி புஷ்பா 2வில், ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழுவிடம் இருந்து வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan