இன்ஸ்டாகிராமில் பெரிய சாதனை படைத்த நடிகை சமந்தா.., இத்தனை கோடியா!
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார். இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி, நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதிக்கவுள்ளார். அதன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது அதற்கு அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது டாப் நடிகையாக உள்ள சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதும் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்வோரின் தற்போது 20 மில்லியனுக்கு(2 கோடி) உயர்ந்துள்ளது. இதன்முலம் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர் ஆகியுள்ளார்.