நடிகர் விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா.. அதுவும் சூப்பர்ஸ்டார் முன்! வைரல் வீடியோ

By Kathick Mar 16, 2024 07:30 AM GMT
Report

விஜய் - சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தளபதி விஜய்யுடன் இணைந்து இதுவரை மூன்று முறை நடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்திலும் விஜய்யுடன் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

தமிழில் எப்படி சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல் தெலுங்கிலும் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார். மகேஷ் பாபு, ரவி தேஜா என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா.. அதுவும் சூப்பர்ஸ்டார் முன்! வைரல் வீடியோ | Samantha Insulted Vijay In Television

இந்த நிலையில், சமந்தா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொண்டுள்ளார். அப்போது மகேஷ் பாபுவிடம் உங்களுக்கு எந்த விதமான படங்கள் பிடிக்கும் என சமந்தா கேட்டார். அதற்கு கத்தி போன்ற திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா

இதன்பின், அதை நீங்கள் ரீமேக் செய்து நடிப்பீர்களா என அதன்பின் கேள்வி எழுப்பினார் சமந்தா. இதற்கு, 'இல்லை நான் ரீமேக் படங்களில் நடிக்கமாட்டேன்' என கூறினார் மகேஷ் பாபு. அப்போது, நீங்கள் விஜய்யுடைய படங்களை ரீமேக் செய்து நடிக்க மாட்டீர்கள். ஆனால், விஜய் உங்களுடைய படங்களை ரீமேக் செய்து நடிக்கிறார்' என கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யை அவமானப்படுத்தினாரா சமந்தா.. அதுவும் சூப்பர்ஸ்டார் முன்! வைரல் வீடியோ | Samantha Insulted Vijay In Television

இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய்யை அவமானப்படுத்தும் வகையில் சமந்தா பேசியுள்ளார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மற்றவர்கள் இது உண்மை தானே என்றும் கூறுகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US