மீண்டும் புஷ்பா படத்தில் குத்தாட்ட பாடல்.. சமந்தாவிற்கு பதில் நடனம் ஆடும் பாலிவுட் நடிகை
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் புஷ்பா. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, பிரபல முன்னணி கதாநாயகி சமந்தா, நடனம் ஆடி இருந்தார்.
இந்த பாடல் Youtubeல் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரவுள்ளது.
சமந்தாவிற்கு பதிலாக பாலிவுட் நடிகை
இந்த புஷ்பா - தி ரூல் படத்திலும் குத்துப்பாடல் ஒன்று இருக்கிறதாம். ஆனால், இதில் சமந்தா நடனம் ஆடவில்லையாம்.
அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டாணியிடம், இந்த பாடலுக்கு நடனம் ஆட, படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள்
