சினிமா வரலாற்றில் சம்பள விஷயத்தில் புதிய முயற்சி எடுத்துள்ள நடிகை சமந்தா.. குவியும் வாழ்த்து
நடிகை சமந்தா
நடிகைகளை தாண்டி நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் என்ற பேச்ச தமிழை தாண்டி எல்லா மொழி நடிகைகளிடமும் இந்த பேச்சு உள்ளது.
ரஜினி, விஜய் எல்லாம் ரூ. 100 கோடியை தாண்டி ரூ. 200, ரூ 300 கோடி என வாங்க முன்னணி நாயகியாக கூறப்படும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா ஆகியோர் இன்னும் ரூ. 20 கோடியை கூட தாண்டவில்லை.
நடிகர்களை போல நடிகைகளுக்கும் சம்பளம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
தயாரிப்பாளர்
கடந்த 2023ம் ஆண்டு திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் முதல் திரைப்படமாக பங்காரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தயாரிப்பாளராக நடிகை சமந்தா பாலின பாகுபாடி இன்றி சம்பளம் வழங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு முன்னெடுப்பை இதுவரை யாரும் செய்ததில்லை என தெரிவித்துள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
