'கடவுளே நான் பணிவாக இருப்பது மிகவும் கடினம்'.. நடிகை சமந்தா வெளியிட்ட பதிவு
சமந்தா
இந்தியளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், அதில் சமந்தாவின் நடிப்பை அனைவரையும் பாராட்டினார்கள். மிரட்டலான ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கி இருந்தார் சமந்தா. இதை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் படங்கள் என பல வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
சமந்தாவின் பதிவு
இந்த நிலையில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "என்னை நான் அறிந்துகொள்வது என்பதே என்னையே நேசிப்பதாகும். ஒரு மனிதனின் நரகமாக இருக்க நான் விருபுகிறேன். கடவுளே நான் பணிவாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் என்னால் முடித்ததை நான் செய்துகொண்டு தான் இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், சமந்தாவிற்கு என்னாச்சு, இப்படி தத்துவமாக பேச துவங்கிவிட்டாரே என கூறி வருகிறார்கள்.