விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த முன்னணி நடிகை சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா
விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா, நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் சமந்தா இருவரும் இணைந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தனர். ஆனால், எந்த காட்சியிலும் சேர்ந்த நடிக்கவில்லை.

சமந்தா மிஸ் செய்த படம்
இந்நிலையில், சூப்பர் ட டீலக்ஸ் படத்திற்கு முன்பு சமந்தா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம் காதலும் கடந்து போகும்.
ஆம், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க முதன் முதலில் தேர்வானது சமந்தா தானாம்.
ஆனால், அப்போது இருந்த சில காரணத்தினால் சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.