சென்னை வந்ததும் முதல் வேலை.. CM விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா உருக்கமாக சொன்ன விஷயம்
நடிகை சமந்தா விஜய் உடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் அவர்கள் ஜோடியாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமந்தா ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் இன்று அவரது அடுத்த படமான 'மா இன்டி பங்காரம்' (தமிழில் "எங்கள் தங்கம்") ப்ரோமோஷனுக்காக சென்னை வந்திருக்கிறார்.

விஜய் உடன் சந்திப்பு
சென்னை வந்ததும் முதல் வேலையாக அவர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். "விஜய் சார் திரையில் மட்டும் ஹீரோ அல்ல என எப்போதும் நான் நினைப்பேன். அவரது எனர்ஜி, மக்கள் அவருக்கு கொடுக்கும் அன்பு பார்க்கும்போது அவர் சினிமாவை விட பெரிய விஷயங்களுக்கு தகுந்தவர் என நினைத்தேன்."
"ஒரு புது விஷயத்திற்குள் முழுமையாக இறங்கும் அவரது தைரியம் எனக்கு ஊக்கம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது" என சமந்தா பதிவிட்டு இருக்கிறார்.
"ஒவ்வொரு இளைஞருக்கும் இது ஒரு reminder, வாழ்க்கை நீங்கள் காண தொடங்கிய கனவை விட பெரிதாக இருக்கலாம்" எனவும் கூறியுள்ளார்.
