சமந்தா மற்று நாக சைத்தன்யா இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்களா?- இவர்களே கூறுகிறார்களே?
தெலுங்கு சினிமா வட்டாரங்களில் இப்போது ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.
அது என்னவென்றால் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கிறார்களாம். சமந்தா அவர் வீட்டைவிட்டு வெளியேற நாக சைத்தன்யாவும் அவரது அப்பாவுடன் இருந்த வீட்டிற்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
நாகர்ஜுனா எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்தியும் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் அண்மையில் தான் இருவரும் மும்பை, கோவா போன்ற இடங்களில் சேர்ந்து வீடு வாங்கியதாக தெரிவிக்கின்றனர்.
சமந்தா- நாக சைத்தன்யா விவாகரத்து செய்தி பரவ ஆரம்பித்ததே நடிகை தனது சமூக வலைதளங்களில் பெயரை மாற்றிய பிறகு தான்.
அதோடு நாகர்ஜுனா பிறந்தநாளுக்கு சமந்தா, சமூக வலைத்தளத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா’ என்று உரிமையோடு வாழ்த்தியுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போதெல்லாம், இவர்கள் பிரிவு வெறும் வதந்தி தான் என்றே தெரிகின்றது.