"இப்படி நடக்கும் என கனவில்கூட நினைக்கவில்லை" - வருத்தம் தெரிவித்த நாகார்ஜூனா..
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.
இந்நிலையில் பிரபல நடிகரும் நாக சைதன்யாவின் அப்பாவுமான நாகார்ஜூனா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் "நடிகை சமந்தா மிக வேகமாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து விட்டார்.
எங்கள் எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல சமந்தா அனைவருடனும் மிகவும் ஜாலியாக இருப்பார். எனக்கும் என் மனைவி அமலாவுக்கும் சமந்தா ஒரு மருமகளாக இல்லாமல் ஒரு மகள் மாதிரி இருந்தார்.
நாகசைதன்யா - சமந்தா பிரியும் நிலை ஒன்று வரும் என நாங்கள் கனவில்கூட கற்பனை செய்யவில்லை. விவாகரத்து முடிவு எடுத்தது வேதனையாக இருக்கிறது. அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு வராமல் இருந்திருக்கலாம். இருவரும் விட்டுக்கொடுத்து போய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும்கூட நான் அவரை எனது மகள் மாதிரிதான் பாவிக்கிறேன். அதுமட்டுமல்ல அவரும் அவரது சினிமா கேரியரும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என மனதார எதிர்பார்க்கிறேன். மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
