சமந்தா - நாக சைதன்யா பிரிவால் மனமுடைந்த நடிகர் நாகார்ஜூனா வெளியிட்ட பதிவு !

samantha Naga Chaitanya Nagarjuna
By Jeeva Oct 02, 2021 03:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா - நாக சைதன்யவாக தான் இருக்க முடியும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் தற்போது பிரிந்துள்ளனர்.

இவர்களின் பிரிவு குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், இருவரும் தனித்தனியே அளித்த பேட்டியில் அதனை மறுத்து வந்தனர்.

ஆனால் தற்போது அவர்களே பிரிவதாக அறிவித்துள்ளது, சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது நாக சைதன்யா தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா அவர்களின் பிரிவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "கனத்த இதயத்தோடு இதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே நடந்த விஷயம் துரதிருஷ்டவசமானது. கணவன் மனைவிக்கு இடையே என்ன நடக்கிறது என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம்.

அவர்கள் இருவரும் எனக்கு அன்பானவர்கள். சமந்தாவுடன் கழித்த தருணங்களை என் குடும்பம் எப்போதும் போற்றும்." என பதிவில் தெரிவித்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US