சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? சொகுசு கார் மட்டும் இத்தனையா
தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தார். அதற்கு பிறகு அவர் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியதால் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.
தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் அவர் ஒரு படத்திற்கு 3 கோடி ருபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 80 கோடி ரூபாய் எனவும், அவருக்கு ஹைதராபாத் மற்றும் பல இடங்களில் சொத்துகள் இருக்கிறதாம். மேலும் அவர் மும்பையில் விரைவில் வீடு வாங்கி செட்டில் ஆக போகிறார் எனவும் சொல்லப்படுகிறது.
சமந்தாவுக்கு சொந்தமாக மூன்று சொகுசு கார்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு BMW மற்றும் ஒன்று ஜாக்குவார் கார்.