38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா.. எவ்வளவு தெரியுமா
சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழுலும் கதாநாயகியாக களமிறங்கினார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த படம் என்றால், அது ராஜமௌலியின் நான் ஈ திரைப்படம் தான்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் கலக்கிக்கொண்டிருந்த சமந்தா முன்னணி நடிகையாக உயர்ந்தார். விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், மகேஷ் பாபு, ஜூனியர் என் டி ஆர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
கதாநாயகியாக மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதுவும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. சில சர்ச்சையிலும் சிக்கினார்.
கடந்த சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தாவால் பெரிதும் படங்களில் நடிக்க முடியாமல் போனது. கடைசியாக வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும், அதில் சமந்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் தற்போது சுபம் என்கிற ஹாரர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
சமந்தாவின் பிறந்தநாள்
இன்று ஏப்ரல் 28ம் தேதி நடிகை சமந்தாவின் பிறந்தநாள் ஆகும். தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு, திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் சமந்தாவின் 38வது பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 101 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், கடைசியாக வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் 3BHK பிளாட் விலை ரூ. 7.8 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் மும்பையில் சமந்தா வாங்கியுள்ள 3BHK வீட்டின் விலை ரூ. 15 கோடியாகும் என தகவல் கூறப்படுகிறது. ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல், அதிகாரப்பூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
