முதல்முறையாக இப்படியொரு படத்தில் நடிகை சமந்தா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரிவு அணைத்து ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார்.
புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் அப்படம் உருவாகவுள்ளது. புதிய முயற்சியாக அப்படம் பேண்டஸி ரொமான்டிக் திரைப்படமாக உருவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu